E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0609/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.

    1. 609/2020

      கௌரவ திலிப் வெதஆரச்சி,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1818 மற்றும் 1819 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஊவ – வெல்லஸ்ஸ போராட்டத்திற்கு ஹம்பாந்தோட்டை பிரதேசத்திலிருந்து தலைமைத்துவம் வழங்கிய வீரர்கள் பற்றிய தகவல்கள், தேசிய ஆவணக்காப்பகத் திணைக்களத்தில் காணப்படாமை தொடர்பில் தங்கள் அமைச்சின் அலுவலர் ஒருவரினால் ஆய்வொன்று நடாத்தப்பட்டுள்ளது என்பதுடன் குறித்த ஆய்வின் முன்னேற்றம் யாதென்பதையும்;

      (ii) மேற்படி வீரர்கள் இராஜதுரோகிகளாக பெயரிடப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) ஹம்பாந்தோட்டை மாவட்டச் செயலாளர் மேற்படி வீரர்களை, தேசிய வீரர்களாக பெயரிடுவது பொருத்தமானதென முன்மொழிந்திருப்பது அப்போதைய தேசிய மரபுரிமைகள் பற்றிய அமைச்சின் மேலதிகச் செயலாளரினால் நீதி அமைச்சின் மேலதிகச் செயலாளருக்கு (சட்டம்) அனுப்பப்பட்டுள்ள 2020.01.14 ஆம் திகதிய கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், அதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ திலிப் வெதஆரச்சி, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-03-24

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks