பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
711/2020
கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் தற்போது இயங்குகின்ற முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாது;
(ii) தற்போது மூடப்பட்டுள்ள முன்பள்ளிகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(iii) முன்பள்ளிகளின் வசதிகளை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அல்லது கொடுப்பனவினை வழங்குவதிலான முறையான செயன்முறையொன்று காணப்படுகின்றதா;
(ii) முன்பள்ளி ஆசிரியர்களை இலங்கை ஆசிரியர் சேவையில் அல்லது அதற்கு நிகரான பிறிதொரு ஒருங்கிணைந்த சேவையில் உள்ளீர்ப்பதற்கான வேலைத்திட்டமொன்று உள்ளதா என்பதையும் ;
(iii) முன்பள்ளி ஆசிரியர்களின் ஆட்சோ்ப்பு மற்றும் அவர்களது தகைமைகளைத் தீர்மானித்தல் தொடர்பில் குறிப்பிட்டதொரு ஒழுங்குமுறைப்படுத்தும் செயன்முறை காணப்படுகின்றதா என்பதையும் ;
(iv) முன்பள்ளிகளில் கல்வி பயிலும் பிள்ளைகளிடமிருந்து அறவிடப்படும் கட்டணங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் செயன்முறையொன்று உள்ளதா என்பதையும் ;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) முன்பள்ளிகளின் கல்வியை முறைப்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்த உத்தேசித்துள்ள புதிய பிரேரணைகள் யாவை என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-19
கேட்டவர்
கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks