E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0731/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

    1. 731/2020

      கௌரவ கே.பீ.எஸ். குமாரசிறி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் பரவி வரும் டெங்கு நோயைக் கட்டுபடுத்துவதற்கு அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன என்பதையும்;

      (ii) அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை போன்ற மாவட்டங்களில் நிலவுகின்ற வறட்சி காலநிலை மாறி மீள மழை பெய்யத் தொடங்கியதும் நுளம்புப் பெருக்கம் அதிகரிக்கும் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) இலங்கையில் இதுவரை டெங்கு நோய்க்கு ஆளானவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) டெங்கு நோயை ஒழிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) டெங்கு நுளம்புக் குடம்பிகளை ஒழிப்பதற்கு 2008/2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அப்போதைய அரசாங்கத்தினால் B.T.I பக்றீரியாவை கியூபாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு பலவேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்ததென்பதை அவர் அறிவாரா?

      (ஈ) (i) இலங்கையில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு B.T.I பக்றீரியாவை பயன்படுத்துவதற்கான சாத்தியம் தொடர்பாக ஆய்வு நடாத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) இலங்கையில் டெங்கு நுளம்புகளை ஒழிப்பதற்கு B.T.I பக்றீரியாவை பயன்படுத்துவதற்கு சாத்தியம் இல்லாத பட்சத்தில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      (iii) B.T.I பக்றீரியாவுக்குப் பதிலாக டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய மாற்றுவழி என்ன என்பதையும்;

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-08

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

சுகாதாரம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-11-20

பதில் அளித்தார்

கௌரவ சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks