E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0760/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.

    1. 760/2020

      கௌரவ வடிவேல் சுரேஷ்,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) தற்போது பதுளையிலிருந்து கண்டி வரை காணப்படுகின்ற வீதிக்கான மாற்று வழியாக பதுளையிலிருந்து கண்டி வரை 20 – 30 கி.மி. குறைவான தூரத்தைக் கொண்ட புதிய வீதியொன்றை நிர்மாணித்தல் எனும் தலைப்பில் முன்னாள் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் 2004.10.29 ஆம் திகதியும் 2004/10 ஆம் இலக்கமும் கொண்ட அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வீதியை இரண்டு கட்டங்களின் கீழ் நிர்மாணிப்பதற்கு குறித்த அமைச்சரவை விஞ்ஞாபனம் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) இதுவரை மேற்படி வீதியின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள தூரத்தின் அளவு யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) தற்போது மேற்படி வீதியின் வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன என்பதை அவர் அறிவாரா?

      (ஈ) (i) அப்போதைய அபிவிருத்திப் புரட்சியின் கீழ் பிரதான அபிவிருத்திக் கருத்திட்டமொன்றாக இனங்காணப்பட்டிருந்த இந்த வீதியின் வேலைகள் இதுவரை நிறைவு செய்யப்படாதுள்ளமை தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாது என்பதையும்;

      (ii) விசேட கருத்திட்டமொன்றின் கீழேனும் வீதியின் வேலைகளை நிறைவு செய்து பொது மக்களுக்கு வீதி வசதிகளைச் செய்துகொடுக்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-10

கேட்டவர்

கௌரவ வடிவேல் சுரேஷ், பா.உ.

அமைச்சு

நெடுஞ்சாலைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-10

பதில் அளித்தார்

கௌரவ ஜோன்ஸ்டன் பர்னாந்து, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks