பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0879/ 2021 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பா.உ.

    1. 879/2020

      கெளரவ (கலாநிதி) சுரேன் ராகவன்,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் அரசியல் கைதிகள் இருப்பார்களாயின் அவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவ்வெண்ணிக்கையானது இனவாரியாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;

      (iii) அவர்களுள் ஆகக்கூடிய காலம் சிறையிலுள்ளவரின் பெயர் யாதென்பதையும்,

      (iv) அக்கைதி சிறையிலிடப்பட்டு தற்போது எவ்வளவு காலம் கடந்துள்ளதென்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கையில் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சிறைக்கைதிகள் இருப்பார்களாயின் அவர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (ii) அவ்வெண்ணிக்கையானது இனவாரியாக தனித்தனியாக எத்தனையென்பதையும்;

      (iii) அவர்களுள் ஆகக்கூடிய காலம் சிறையிலுள்ளவரின் பெயர் யாதென்பதையும்;

      (iv) அக்கைதி சிறையிலிடப்பட்டு தற்போது எவ்வளவு காலம் கடந்துள்ளதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) பயங்கரவாத நடவடிக்கைகளுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர்களின் வழக்கு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தி அவர்களுக்கு நீதி நிலைநிறுத்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (ii) பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக பலாத்காரமாக இணைத்துக்கொள்ளப்பட்ட சிறுவர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்டு மீண்டும் சமூகமயப்படுத்தப்படுவார்களா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2021-01-07

கேட்டவர்

கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-01-07

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks