E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1302/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

    1. 1302/ ’11

       

      கெளரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா,— நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இலங்கை வங்கிக்குச் சொந்தமான 65-1990, 32-7394, 32-7393 மற்றும் 65-1986 ஆம் இலக்கங்களையுடைய நான்கு வாகனங்கள், ஒரு வாகனத்திற்கு மாதாந்தம் ரூபா.25000/- வீத வாடகை அடிப்படையில் நிதி அமைச்சிற்கு வழங்கப்பட்டுள்ளதென்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா?

      (ஆ) (i) மேற்படி வாகனங்களுக்கு ஏற்புடைய வாடகைத் தொகை 2009.10.09 ஆம் திகதியிலிருந்து இன்றுவரை நிதி அமைச்சினால் இலங்கை வங்கிக்கு செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) விபத்திற்குள்ளாகியுள்ள 65-1986 ஆம் இலக்க வாகனத்திற்கான இழப்பீட்டுத் தொகை இலங்கை வங்கிக்குச் செலுத்தப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) அவ்வாறாயின், செலுத்தப்பட்ட பணத் தொகை யாதென்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) 65-1990 மற்றும் 32-7393 ஆம் இலக்க வாகனங்கள் இரண்டினையும் மீண்டும் இலங்கை வங்கியிடம் கையளிக்க நடவடிக்கை எடுப்பாரா என்பதயும்;

      (ii) அவ்வாறாயின், அத் திகதி யாதென்பதையும்

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-07-06

கேட்டவர்

கௌரவ கௌரவ எம். ஜோசப் மைக்கல் பெரேரா, பா.உ.,, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks