பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1859/ ’11
கெளரவ சிவசக்தி ஆனந்தன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வவுனியா நகர சபைக்குச் சொந்தமான மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி விற்பனை நிலையங்கள் அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) (i) பூந்தோட்டம், குருமன்காடு மற்றும் வவுனியா சந்தைக்கு அருகிலிருக்கும் மாட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் குருமன்காடு மற்றும் வவுனியா சந்தைக்கு அருகிலிருக்கும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையங்களையும் குத்தகைக்கு வழங்கும்போது கேள்விப்பத்திரங்கள் கோரல் அல்லது பகிரங்க ஏலவிற்பனை நடத்தப்பட்டதா என்பதையும்;
(ii) 2009, 2010 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் மேற்படி ஒவ்வொரு விற்பனை நிலையமும் குத்தகைக்கு வழங்கப்பட்ட தொகை மற்றும் குத்தகை பெற்ற தரப்பினர் வெவ்வேறாக யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) (i) 2011.06.29ஆம் திகதி நடைபெற்ற நகரசபைக் கூட்டத்தின் அறிக்கைபடி வவுனியா சந்தைக்கு அருகில் அமைந்துள்ள மாட்டிறைச்சி விற்பனை நிலையம் திரு. எஸ். கே. காதர் என்பவருக்கு ரூபா 859,711.05 வுக்கும் ஆட்டிறைச்சி விற்பனை நிலையம் திரு. கே. கே. மஸ்தான் என்பவருக்கு ரூபா79,315.50 வுக்கும் கேள்விப் பத்திரங்கள் கோரப்படாமல் குறைந்த தொகைக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும்;
(ii) அதன் மூலம் சபைக்கு மேற்படி மூன்று வருடங்கள் தொடர்பிலும் சுமார் ரூபா ஒரு கோடி நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதையும்
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஈ) அவ்வாறாயின், அதற்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களிடமிருந்து குறித்த பணத்தை அறவிட நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-02-08
கேட்டவர்
கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி, பா.உ.
அமைச்சு
உள்ளூராட்சி, மாகாண சபைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks