பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1922/ ’11
கெளரவ காமினி ஜயவிக்ரம பெரேரா,— பிரதம அமைச்சரும், புத்த சாசன மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2010ஆம் ஆண்டு வரை இலங்கையில் காணப்பட்ட பெளத்த விகாரைகளின் எண்ணிக்கை வருடவாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி விகாரைகளின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் யாவை என்பதையும்;
(iii) 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2005ஆம் ஆண்டு வரை இலங்கையில் காணப்பட்ட விகாரைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மேற்படி காலப்பகுதியில் விகாராதிபதிகள் இல்லாதிருந்த விகாரைகளின் எண்ணிக்கை வருடவாரியாக வெற்வேறாக யாதென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) 1993ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கையில் விகாரைகளில் தய்கியிருந்த துறவறம்பூண்ட பிக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி காலப்பகுதியில் துறவறத்தைக் களைந்த பிக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) 2011ஆம் ஆண்டு சனவரி, பெப்புருவரி மற்றும் மார்ச் ஆகிய மாதங்களில் துறவறத்தைக் களைந்த பிக்குகளின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) துறவறத்தைக் களைவதற்கான காரணங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(இ) (i) பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் விகாரைகளை அபிவிருத்தி செய்ய எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) பின்தங்கிய பிரதேசங்களில் காணப்படும் விகாரைகளுக்கு மாதாந்தம் ரூபா 5000.00 பணத் தொகையையாவது வழங்க நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-01-19
கேட்டவர்
கௌரவ காமினி ஜயவிக்கிரம பெரேரா, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர் அலுவலகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks