E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1942/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 1942/ ’11

      கெளரவ புத்திக பதிரண,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    எம்பிலிப்பிட்டிய கடுதாசி தொழிற்சாலை மற்றும் கந்தளாயில் அமைந்துள்ள சீனித் தொழிற்சாலை ஆகியவற்றை  வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு விற்பதற்கான திட்டமொன்று இருப்பதை அவர் அறிவாரா;

      (ஆ) (i) அவ்வாறெனின், அந்த இரண்டு நிறுவனங்களையும்  விற்பதற்கு  எதிர்பார்க்கப்படும்  கம்பனிகளின் பெயர்கள் மற்றும்  அந்த கம்பனிகள் உரித்தாயுள்ள நாடுகளின் பெயர்களை தனித்தனியாக குறிப்பிடுவாரா;

      (ii) மேற்படி நிறுவனங்கள் விற்கப்படுகின்றபோது விலை மனுக்கள் கோரப்பட்டதா;

      (iii) அவ்வாறெனின், அதற்காக விண்ணப்பங்களை சமர்பித்த கம்பனிகள் மற்றும்  அவை உரித்தாயுள்ள நாடுகளின் பெயர்கள் யாவை;

      (iv) மேற்படி ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பித்த  விலைகள் தனித்தனியாக யாது;

      (v) மேற்படி நிறுவனங்களை விற்பதன் மூலம் அரசாங்கம் எதிர்பார்க்கும் மொத்த வருமானம் எவ்வளவு

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) மேற்கூறிய நிறுவனங்களை விற்பதானது, அரச நிறுவனங்களை விற்பனை செய்வதில்லை என  மகிந்த சிந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள கூற்றுக்கு முரணானது என்பதை அவர்  ஏற்றுக்கொள்வாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-11-24

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-11-24

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ தயாசிறித திசேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks