E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1994/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ திலங்க சுமதிபால, பா.உ.

    1. 1994/ ’11

       

      கெளரவ திலங்க சுமதிபால,— பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், அவ்வலுவலகத்தில் கடமைகளை  ஆரம்பித்த  திகதி யாதென்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ)    மேற்படி  பிரதேச செயலாளரின்,

                 (i)      முதல் நியமனத் திகதி மற்றும் கடமையாற்றிய இடம் யாது;

      (ii) இலங்கை நிர்வாகச் சேவையில் தரம் யாது;

      (iii) பதவி வகிக்கும் அடிப்படை யாது

      என்பதை அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) உத்தியோகத்தர்கள் மற்றும் தனிநபர்களுக்கு எதிராக இப்பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளரிடத்திலும் ஆளுநரிடத்திலும், இதுவரை செய்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;

      (ii) மேற்படி பிரதேச செயலாளருக்கும் மேற்படி அலுவலகத்தின் கிராம உத்தியோகத்தர்களுக்கும் எதிராக, மாவட்ட செயலாளருக்கும் ஆளுநருக்கும் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கும் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாது;

      (iii) பிரதேச செயலாளருக்கு எதிரான முறைப்பாடுகள் சுருக்கமாக யாவை;

      (iv) முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் அவர்களின் பிரிவுகள் யாவை;

      (v) மேற்படி முறைப்பாடுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) (i) மேற்படி பிரதேச செயலாளர், மாகாணக் காணி ஆணையாளருக்கு எதிராக கிழக்கு மாகாண ஆளுநரிடத்தில் செய்துள்ள முறைப்பாடு யாது;

      (ii) அது தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளதா;

      (iii) அதன் விதப்புரைகள் யாவை;

      (iv) தற்போது, அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-02-09

கேட்டவர்

கௌரவ திலங்க சுமதிபால, பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks