E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0382/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 382/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     ​​(i)     இலங்கையின் நகரங்களை அழகுபடுத்தும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போது கண்டி நகர வீதிகளின் இருமருங்கிலும் சூழலியல் ரீதியில் பெறுமதியான மரங்கள் நாட்டப்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கண்டி மாவட்டத்தின் பிரதான நகரங்களில் அமைந்துள்ள வீதிகளின் இருமருங்கிலும் உள்ள பழைய மரங்களுக்குப் பதிலாக சூழலியல் ரீதியில் பெறுமதி வாய்ந்த மரங்களை நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு கண்டி மாவட்டத்தில் பொருத்தமான நகரங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) அந்நகரங்கள் யாவையென்பதையும்;

      (v) மேற்படி நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) கண்டி நகரில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களிலும் பொது இடங்களிலும் நிதமும் யாசகர்கள் நடமாடுவதால் நகரின் எழிலுக்கும் தூய்மைக்கும் பாதகமான தாக்கம் ஏற்பட்டுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி யாசகர்களை வேறு பொருத்தமான இடத்திற்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (iii) ஆமெனில், அது தொடர்பாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-04-04

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks