பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0383/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 383/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— தொழில்நுட்ப அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பல்வேறு தொலைபேசி நிறுவனங்களுக்குரிய சிம்அட்டைகள் அரசாங்கத்தின் முறையான ஒழுங்குபடுத்தலின்றி பிரதான நகரங்களின் நடைபாதைகளில் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும்;

      (ii) மேற்படி சிம்அட்டைகளை மோசடியாக பாரிய அளவில் கொள்வனவு செய்கின்ற நபர்களினால் அவை தவறாக பயன்படுத்தப்பட்டு பல்வேறான முறைகேடுகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதையும்;

      (iii) இணையத்தளத்தினூடாக பொருட்களை வழங்குவதாக உறுதியளித்து வங்கிக் கணக்குகளில் பணத்தை வரவு வைத்து மோசடி செய்யும் தீத்தொழில் இடம்பெறுகின்றது என்பதையும்;

      (iv) கண்டி, இரத்தினபுரி, பிலியந்தலை, பதுளை மற்றும் கொழும்பு உட்பட பெரும்பாலான பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் இன்றளவில் மேற்படி தீத்தொழிலுக்கு இரையாகியுள்ளனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) ஆமெனில், மேற்படி மோசடிகளைத் தடுப்பதற்கு இன்றளவில் மேற்கொள்ளப் பட்டுள்ள நடவடிக்கைகளும் எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகளும் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-04-27

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

தொழில்நுட்பம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ கனக ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks