பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0384/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

    1. 384/2023

      கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) விக்டோரியா நீர்த்தேக்கத்தின் ஆகக் கூடிய நீர்க் கொள்ளளவு 2021 ஆம் ஆண்டளவில் 723 மில்லியன் கன மீற்றர் ஆக இருந்ததுடன் 2022 ஆம் ஆண்டு சனவரி மாத இறுதியில் அது 428 மில்லியன் கன மீற்றர் வரை குறைவடைந்தது என்பதையும்;

      (ii) அந்த நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் சடுதியாக குறைவடைவதற்கு மகாவலி கங்கையின் மத்தியில் ஏற்பட்டுள்ள வெடிப்பொன்றே காரணமாக அமைந்துள்ளது என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மகாவலி கங்கையின் நீர்க் கொள்ளளவு சடுதியாக குறைவடைகின்றமை தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (ii) நீர்த்தேக்க மட்டத்தில் வருடாந்த நீர்க் கொள்ளளவு பற்றிய கணக்காய்வு ஒன்றினை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) மின்சார உற்பத்திக்காக அதிகளவில் நீரைப் பயன்படுத்துவதனால் கங்கைகளில் நீர் வற்றிப் போதல் / ஆவியாதல் காரணமாக எதிர்காலத்தில் விவசாயத்திற்குத் தேவையான நீரை உரிய காலத்தில் பெற்றுக்கொள்வது சிக்கலாக அமையலாம் என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-11

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி வசந்த யாப்பாபண்டார, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks