E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0686/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

    1. 686/2023

      கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம்,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) சுமார் 1300 இற்கும் மேற்பட்ட வியாபாரிகள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் களுவாஞ்சிக்குடி வர்த்தக மையத்தில்/சந்தையில் துப்பரவேற்பாட்டு வசதிகள் மற்றும் வடிகான் கட்டமைப்புகள் போன்ற அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் போதுமானதாக இல்லையென்பதையும்;

      (ii) வர்த்தக நடவடிக்கைகளுக்குத் தேவையான நிரந்தரக் கட்டிடங்கள் இன்மையால் திறந்த வெளிகளில் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன் மழை காலங்களில் வியாபாரிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதையும்;

      (iii) இந்த இடத்தில் அமைந்துள்ள மீன்சந்தை தொழில்நுட்ப வசதிகளுடன்கூடியதாக புனரமைக்கப்படாமையால் மீன் வியாபாரிகள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர் என்பதையும்;

      (iv) அதன் வீதிகள் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி வர்த்தக மையத்தை/சந்தையை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம், பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-03-22

பதில் அளித்தார்

கௌரவ ஜானக வக்கும்புர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks