E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1314/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

    1. 1314/2023

      கௌரவ நலீன் பண்டார ஜயமஹ,—  நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     தெதுரு ஓயா நீர்த்தேக்கக் கருத்திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவினம் மற்றும் இறுதிச் செலவினம் என்பன தனித்தனியே யாவை  என்பதையும்;

                 (ii)    தற்போது மேற்படி கருத்திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) இக்கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டமைக்கான நோக்கங்கள் யாவை என்பதையும்;

      (iv) இன்றளவில் இந்நோக்கங்கள் நிறைவேறியுள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் வலதுகரை கால்வாய் மற்றும் இடதுகரை கால்வாய் என்பவற்றின் ஊடாக திறந்துவிடுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ள நீரின் உச்சளவு தனித்தனியே யாதென்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்தினை நிறைவு செய்த பின்னர் திட்டமிடப்பட்டவாறு இடதுகரை கால்வாயிலிருந்தும் வலதுகரை கால்வாயிலிருந்தும் நீர் திறந்துவிடப்படுமா என்பதையும்;

      (iii) வலதுகரை மற்றும் இடதுகரை என்பவற்றுக்கான கட்டமைப்புகள் முறையான அத்திவாரமோ அல்லது முறையான இணைப்புகளோ இன்றி நிர்மாணிக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) மேற்படி கருத்திட்டத்தின் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் பயன்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி கருத்திட்டத்திற்காக காணிகளைச் சுவீகரிப்பதற்கும் நீரில் மூழ்கும் காணிகளுக்கு இழப்பீடுகளைச் செலுத்துவதற்கும் உறப்பட்ட செலவினம் தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-05-12

கேட்டவர்

கௌரவ நலீன் பண்டார ஜயமஹ, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-06-20

பதில் அளித்தார்

கௌரவ சஷீந்திர ராஜபக்ஷ, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks