பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1623/2023
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் ஒவ்வொரு பயிர்ச்செய்கை போகங்களிலும் இடம்பெறுகின்ற வானிலை மாற்றங்கள் காரணமாக மரக்கறி விதை உற்பத்தியில் ஏற்படும் சிக்கல்களை ஆராய்ந்து இதற்கான ஒரு தீர்வாக, பசுமைக்குடில்களில் மரக்கறி விதைகளை உற்பத்தி செய்வதற்கு உகந்ததொரு வேலைத்திட்டத்தை தயார் செய்வதற்காக, 2018ஆம் ஆண்டில் குண்டசாலை விவசாய ஆலோசகர் கமத்தொழில் அமைச்சின் அனுமதியை கோரியுள்ளார் என்பதை அறிவாரா;
(ii) அது தொடர்பில் இன்றளவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(iii) மேற்படி வேலைத்திட்டத்தில் தனியார் துறைக்குச் சொந்தமான பசுமைக் குடில்களையும் இணைத்துக்கொள்வதற்கு உத்தேசிக்கப்படுகின்றதா;
(iv) ஆமெனில், அப்பசுமைக்குடில்களை மேற்படி வேலைத்திட்டத்துடன் இணைத்துக்கொள்ளும் முறையியல் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-11-10
கேட்டவர்
கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks