பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1673/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 1673/2023

      கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) ​​(i) இலங்கையில் நிலவிய போர்ச் சூழல் காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வசித்த ஆயிரக்கணக்கான தமிழர்கள் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து முகாம்களிலும் முகாம்களுக்கு வெளியே பிற இடங்களிலும் தங்கியுள்ளார்கள் என்பதையும்;

      (ii) தற்போது போர் நிறைவடைந்துள்ள போதிலும், மேற்படி குழுவைச் சேர்ந்த சுமார் 100,000 பேருக்கு இலங்கைக்கு மீண்டும் வருகைதர இயலாதுள்ளதென்பதையும்;

      (iii) அம்மக்களில் முகாம்களுக்கு வெளியே பிற இடங்களில் தங்கியுள்ள பலர், இந்திய அரசாங்கத்தால் வீசா வழங்கப்படாததால் இலங்கைக்குத் திரும்பும் போது, இவர்கள் இந்தியாவில் தங்கியிருந்த முழுக் காலத்திற்குமான வீசா கட்டணத்தைச் செலுத்த நேரிட்டுள்ளதென்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதை அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-21

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

வெளிநாட்டு அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-05-09

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks