E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1676/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

    1. 1676/2023

      கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன்,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) முல்லைத்தீவு மாவட்டத்தில், கரைதுறைபற்று பிரதேச செயலாளர் பிரிவில், கொக்குத்தொடுவாயிலிருந்து திருகோணமலை மாவட்டத்தின் தென்னைமரவாடி வரை செல்லும் சுமார் 15 கிலோ மீற்றர் கொண்ட விவசாய பயன்பாட்டு வீதியொன்று உள்ளது என்பதையும்;

      (ii) குறித்த வீதி இன்றளவில் விவசாயிகளால் பயன்படுத்த முடியாத அளவுக்கு சேதமடைந்துள்ளது என்பதையும்;

      (iii) குறித்த வீதியின் இருமருங்களிலும் காணப்படுகின்ற வயல்களின் அறுவடையை சந்தைப்படுத்துவதற்கு விவசாயிகள் பயன்படுத்தும் ஒரே வீதி மேற்படி வீதி என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) குறித்த வீதியை விவசாயிகள் பயன்படுத்தக்கூடிய வகையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-06

கேட்டவர்

கௌரவ சாள்ஸ் நிர்மலநாதன், பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-06-06

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks