பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2233/ ’12
கெளரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள், அதனைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட 28/2010ஆம் இலக்க பொது நிர்வாகச் சுற்றறிக்கை ஆகியவற்றிற்கிணங்க இலங்கை ஆசிரியர் சேவையில் உள்ள ஆசிரியர்களின் சம்பளங்கள் மற்றும் படிகள் திருத்தியமைக்கப்படாமல் இருப்பதையும்;
(ii) ஆசிரியர்களின் கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகளுக்கிணங்க அவர்கள் சரியான சம்பளப் படிநிலைகளில் இற்றைவரை அமர்த்தப்படாமல் இருப்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) சம்பளங்ளைத் திருத்தியமைத்தல், ஆசிரியர்களை சரியான சம்பளப் படிநிலைகளில் அமர்த்துதல் ஆகியவை பற்றிய அறிவுறுத்தல்களை வழங்கும் ஏதாவது சுற்றறிக்கை வலயக் கல்வி அலுவலகங்களுக்கு அண்மையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) இன்றேல், ஆசிரியர்களின் சம்பளங்களைத் திருத்தியமைத்தல் பற்றிய சூழ்நிலையைச் சீராக்குவதற்கு அவசியமான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல் ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-05-08
கேட்டவர்
கௌரவ (திருமதி) விஜயகலா மகேஸ்வரன், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks