பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2690/2023
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தரத்தில் உயர்ந்த விதைகளைப் பெற்றுக்கொள்வதானது விவசாயத்துறையில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும் என்பதையும்;
(ii) சந்தையில் அதிக விலைக்கு விதைகள் விற்பனை செய்யப்படுகின்றன என்பதையும்;
(iii) மேற்படி விதைகள் தரமற்றவை என்பதையும்;
(iv) அதன் காரணமாக விவசாயிகள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) விவசாயிகளுக்கு தரத்தில் உயர்ந்த விதைகளை வழங்குவதற்காக இன்றளவில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;
(ii) விவசாயிகளுக்குத் தேவையான விதைகளை அரசாங்கத்தின் அனுசரணையின் கீழ் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(iii) விதைகளுக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iv) இலங்கைக்குத் தேவையான விதைகளை நாட்டுக்குள்ளேயே உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்கான வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(v) கமநல சேவை நிலையங்களை, பிரதேச விதைக் களஞ்சியசாலைகளாக மேம்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-10
கேட்டவர்
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks