பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2694/2023
கௌரவ கே. பி. எஸ். குமாரசிறி,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அனுராதபுரம் பிரதான தபால் அலுவலகம் தாபிக்கப்பட்டுள்ள கட்டிடம் இன்றளவில் சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றது என்பதையும்;
(ii) அதன் காரணமாக பாவனையாளர்களினதும் ஊழியர்களினதும் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கட்டிடத்தை புனரமைக்காமல் அது அமைந்துள்ள தபால் திணைக்களத்துக்குச் சொந்தமான காணியை வீடமைப்புக் கருத்திட்டமொன்றுக்காக தனியார் கம்பனியொன்றுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை மெற்கொள்ளப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) அதற்கென இன்றளவில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ள நிபந்தனைகள் யாவை என்பதையும்;
(iii) காணி மற்றும் கட்டிடத்தின் உரித்தினை தபால் திணைக்களத்திடம் வைத்துக்கொண்டு குறித்த காணியில் மேற்படி கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இன்றளவில் நட்டத்தில் இயங்கும் தபால் திணைக்களத்தை இலாபமீட்டும் நிலைக்கு கொண்டுவருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) இன்றைய சமூக மற்றும் சந்தை தேவைப்பாடுகளுக்கு ஏற்றவாறு தபால் திணைக்களத்தை நவீனமயப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-04
கேட்டவர்
கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.
அமைச்சு
வெகுசன ஊடகம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks