பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2878/2023
கௌரவ யதாமிணீ குணவர்தன,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பெருமளவிலான இலங்கையர்கள் வௌிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபட்டுள்ளதோடு, சாதாரணமாக ஒருவர் இலங்கைக்கு அனுப்புகின்ற நிதித் தொகையானது, கடந்த இரண்டு மூன்று தசாப்தங்களுக்கு முன்பிருந்ததை விட தற்போது அதிகரித்துள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;
(ii) இவ்வாறு எண்ணிக்கையில் அதிகளவான இலங்கைத் தொழிலாளர்கள் இருக்கின்ற பத்து நாடுகளும் பத்து நகரங்களும் தனித்தனியாக யாவையென்பதையும்;
(iii) இவ்வாறு அதிகூடிய இலங்கை தனிநபர் பணவனுப்பல் சராசரி பெறுமதிகளைக் கொண்டுள்ள பத்து நாடுகளும் பத்து நகரங்களும் தனித்தனியாக யாவை என்பதையும்;
(iv) அவ்வாறே ஒட்டுமொத்தமாக, அதிகூடிய பணவனுப்பல்களை மேற்கொள்கின்ற பத்து நாடுகளும் பத்து நகரங்களும் தனித்தனியாக யாவை என்பதையும்;
(v) மேற்படி நாடுகளிலிருந்து அல்லது நகரங்களிலிருந்து பணம் அனுப்புவதற்காக இலங்கை மத்திய வங்கியினால் அங்கீகரிக்கப்பட்டுள்ள வங்கியொன்றில் அல்லது நிதி நிறுவனமொன்றில் வசதிகள் உள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-04-26
கேட்டவர்
கௌரவ யதாமிணீ குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-20
பதில் அளித்தார்
கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks