E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2933/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

    1. 2933/2023

      கௌரவ ஹெக்டர் அப்புஹாமி,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ஓமான் மற்றும் துபாய் போன்ற நாடுகளுக்கு இலங்கைப் பெண்களை ​கொண்டு செல்லும் மனித வியாபாரம் இடம்பெறுவதை அறிவாரா என்பதையும்;

      (ii) குறிப்பிட்ட வியாபாரத்துடன் மேற்படி நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதரக பணியாளர்களும் தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளிக்கொணரப்பட்டுள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு பணியாளரினதும் பெயர், பதவி மற்றும் சேவை நிலையம் யாதென்பதையும்;

      (iv) மேற்படி பணியாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (v) புலம்பெயர் இலங்கைத் தொழிலாளர்கள் மற்றும் அந்நாடுகளில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கைத் தூதரகங்களில் பணியாற்றும் பணியாளர் களுக்குமிடையில் நல்லுறவை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ ஹெக்டர் அப்புஹாமி, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks