E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3106/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

    1. 3106/2023

      கெளரவ சிவஞானம் சிறீதரன்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)   (i)      யாழ்ப்பாணம், நெடுந்தீவில் அமைந்துள்ள வாவிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                (ii)     அவற்றில் பாசன நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்ற மற்றும் பயன்படுத்தப்படாத வாவிகளின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;

      (iii) மேற்படி வாவிகளின் நீர்க் கொள்ளளவு தனித்தனியே யாதென்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) நெடுந்தீவில் அமைந்துள்ள வாவிகளில் இன்றளவில் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ள வாவிகளின் பெயர்கள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி வாவிகளை புனரமைப்புச் செய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) இன்றளவில் புனரமைப்புச் செய்யப்படாதுள்ள வாவிகளை புனரமைப்புச் செய்வதற்கு எடுக்கும் காலம் எவ்வளவு என்பதையும்;

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) இத்தீவில் காணப்படுகின்ற குடிநீர்ப் பிரச்சினைக்குத் தீர்வாக தீவில் அமைந்துள்ள வாவிகளின் மூலம் குடிநீரைப் பெற்றுக்கொள்வதற்கான ஏதேனும் முறையியல் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் மேலும் குறிப்பிடுவாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-07-06

கேட்டவர்

கௌரவ சிவஞானம் சிறீதரன், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks