E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3153/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ தவராஜா கலை அரசன், பா.உ.

    1. 3153/2023

      கெளரவ தவராஜா கலை அரசன்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கல்வி அமைச்சின் தொழில்நுட்பக் கல்வி அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டப் பணிப்பாளரின் 2020.06.25 ஆம் திகதிய கடிதத்தின் பிரகாரம் கல்முனை கல்வி வலயத்தின், கல்முனை, கமு/கமு/உவெஸ்லி உயர்தரப் பாடசாலையின் தொழில்நுட்பக் கல்விக்காக கட்டிடமொன்றை நிர்மாணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு நிதி ஏற்பாடுகளும் ஒதுக்கப்பட்டு நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன என்பதையும்;

      (ii) மேற்படி கட்டிட நிர்மாணத்திற்காக அப்பாடசாலையின் கணினி அறை மற்றும் ஐந்து வகுப்பறைகளைக் கொண்ட கட்டிடம் முறையான அனுமதியின் கீழ் அகற்றப்பட்டன என்பதையும்;

      (iii) தற்போது மேற்படி பாடசாலையில் தொழில்நுட்ப பாடநெறியைப் பயில்வதற்கு புதிய அல்லது பழைய கட்டிடமொன்று இல்லை என்பதால் மாணவர்கள் அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) இதுவரையும் நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதுள்ள மேற்படி கட்டிடத்தை நிர்மாணிப்பதன் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் தற்போதைய நிலை யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-24

கேட்டவர்

கௌரவ தவராஜா கலை அரசன், பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks