E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3156/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

    1. 3156/2023

      கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் அதிகளவான குளங்களில் தற்போது ஆக்கிரமிப்புத் தாவரங்கள் வளர்ந்துள்ளன என்பதையும்;

      (ii) அத்தாவரங்கள் அழுகி குளத்தின் அடியில் படிவதனால் குளங்கள் நிரம்பி காணப்படுவதையும்;

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்கூறப்பட்ட குளங்களில் காணப்படுகின்ற ஆக்கிரமிப்புத் தாவரங்களை அகற்றுவதற்கான ஒரு வேலைத்திட்டம் உள்ளதா என்பதையும்;

      (ii) நிரம்பியுள்ள குளங்களை புனரமைப்புச் செய்வதற்காக தற்போதுள்ள வேலைத்திட்டம் யாதென்பதையும்;

      (iii) குளங்களில் வளரும் ஆக்கிரமிப்புத் தாவரங்களை கட்டுப்படுத்துவதற்காக விவசாய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) (i) குளத்தின் ஒதுக்குக் காணிகளையும் குளக் கட்டினையும் பாதுகாப்பதற்கு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) குளங்களைப் பாதுகாப்பதற்காக மக்களுடன் ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-10

கேட்டவர்

கௌரவ கே.பி.எஸ். குமாரசிறி, பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks