E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3230/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 3230/2023

      கௌரவ நிரோஷன் பெரேரா,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் இருந்து கொழும்புத் துறைமுகத்திற்கு அதிக எண்ணிக்கையிலான கொள்கலன்கள் வருடாந்தம் கொண்டு செல்லப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (ii) மேற்படி கொள்கலன்களை, இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் மூலமாக கொழும்புத் துறைமுகத்திற்கு எடுத்துச் செல்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) ஆமெனில், மேற்படி முன்மொழிவுகள் யாவையென்பதையும்;

      (iv) இன்றளவில் மேற்படி முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற எரிபொருளை இலங்கை புகையிரதத் திணைக்களத்தின் மூலமாக பல்வேறு பிரதேசங்களுக்கு கொண்டு செல்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி முன்மொழிவுகள் யாவையென்பதையும்;

      (iii) இன்றளவில் மேற்படி முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-21

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks