E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3317/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, பா.உ.

    1. 3317/2023

      கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் இருக்கின்ற கறவை மாடு வகைகள் யாவை என்பதையும்;

      (ii) ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்துவமான கறவை மாடுகள் உள்ளனவா என்பதையும்;

      (iii) இலங்கையிலுள்ள கறவை மாடுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      (iv) மேற்படி கறவை மாடுகளிடமிருந்து அன்றாடம் பெறப்படும் பால் லீட்டர்களின் அளவு ஒவ்வொரு கறவை மாடு வகையின் அடிப்படையில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

      (v) இன்றளவில் சினைப் பருவத்திலுள்ள கறவை மாடுகளின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) பால்மா இறக்குமதி செய்வதற்காக பாரிய நிதித்தொகை செலவு செய்யப்படுகின்றது என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், இலங்கையில் கறவை மாடுகளையும் பாற்பண்ணையாளர்களையும் பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-06-23

கேட்டவர்

கௌரவ உபுல் மஹேந்திர ராஜபக்ஷ, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks