பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
3338/2023
கௌரவ வாசுதேவ நாணாயக்கார,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 1980 ஜூலை வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதன் காரணமாக தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் 2015.12.31ஆம் திகதி வரை ஒரு வேலை நிறுத்தக்காரருக்குச் செலுத்தப்பட்ட 6,000.00 ரூபா மாதாந்தக் கொடுப்பனவுக்குப் பதிலாக 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் முன்மொழிவுகளின் பிரகாரம் ஒரே தடவையில் மாத்திரம் செலுத்தித் தீர்க்கப்படும் 250,000.00 ரூபா தொகையை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது என்பதையும்;
(ii) அதற்கமைய, 2022 ஆம் ஆண்டின் டிசம்பர் மாதம் வரை 65 வயதினைப் பூர்த்தி செய்த வேலை நிறுத்தக்காரர்களுக்கு மேற்படி தொகை உரியவாறு செலுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதல் இதுவரை 65 வயதினைப் பூர்த்தி செய்த எந்தவொரு வேலை நிறுத்தக்காரருக்கும் அத்தொகை செலுத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே அ (iii) இல் குறிப்பிடப்பட்டுள்ள வேலை நிறுத்தக்காரர்களுக்கு மேற்படி தொகையை மீண்டும் செலுத்தும் பணியை ஆரம்பிக்கவுள்ள திகதி யாது;
(ii) அவர்களுக்கு மேற்படி தொகை செலுத்தப்படாமைக்கான காரணங்கள் யாவை;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-06
கேட்டவர்
கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks