E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

3354/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

    1. 3354/2023

      கௌரவ ஜயந்த சமரவீர,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     இன்றளவில் அழிக்கப்பட்டுள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

                 (ii)    அவற்றுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள அழிவின் தன்மை யாதென்பதையும்;

      (iii) அவற்றை அழித்தவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (iv) மேற்படி சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இன்றளவில் இலங்கை பூராகவும் தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் அழிக்கப்படும் போக்கு காணப்படுவதை அறிவாரா என்பதையும்;

      (ii) மேற்படி நிலைமையைத் தடுப்பதற்காக  எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

      (iii) வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டுள்ள தொல்பொருள் நினைவுச் சின்னங்கள் முறையாக பாதுகாக்கப்படுவதில்லை என்பதை ஏற்றுக்கொள்வாரா என்தையும்;

      (iv) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) (i) எதிர்காலத்தில் வர்த்தமானப் பத்திரிகைகளினூடாக பிரசுரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ள  தொல்பொருள் நினைவுச் சின்னங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி ஒவ்வொரு தொல்பொருள் நினைவுச் சின்னத்தினதும் பெயர், அமைந்துள்ள மாகாணம், மாவட்டம் மற்றும் பிரதேச செயலகப் பிரிவு என்பன  வெவ்வேறாக யாவையென்பதையும்;

      (iii) மேற்படி தொல்பொருள் நினைவுச் சின்னங்களை வர்த்தமானப் பத்திரிகையில் பிரசுரிப்பதற்கு எதிர்பார்க்கப்படும் திகதி யாதென்பதையும்;

      அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-08-22

கேட்டவர்

கௌரவ ஜயந்த சமரவீர, பா.உ.

அமைச்சு

புத்தசாசன, சமயம் மற்றும் கலாசார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ விதுர விக்ரமநாயக, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks