பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2523/ ’12
கெளரவ புத்திக பதிரண,— கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வ/ப மில்கோ (தனியார்) நிறுவனத்திற்கு அங்கீகரிக்கப்பட்டுள்ள பணியாட்டொகுதியில் உள்ளடங்கியுள்ள விசாரணை உத்தியோகத்தர் பதவிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) 2010 மே மாதம் முதல் இற்றைவரை இந்நிறுவனத்திற்கு நியமிக்கப்பட்ட ஒவ்வொரு விசாரணை உத்தியோகத்தரினதும் பெயர், முகவரி, நியமிக்கப்பட்ட திகதி, பிறந்த திகதி, நியமிக்கப்பட்ட திகதியன்று உள்ளவாறு வயது, கல்வி மற்றும் தொழில்சார் தகைமைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iii) இவர்கள் நியமிக்கப்பட்டபோது பகிரங்க அறிவித்தல்கள் மூலமாக கோரப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டதா என்பதையும்;
(iv) இன்றேல், மேற்படி நியமனங்கள் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) நியமிக்கப்பட்ட திகதி முதல் 2012 பெப்ருவரி 29 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில்,
(i) ஒவ்வொரு மாதத்திலும் விசாரணை உத்தியோகத்தர்களுக்கு செலுத்தப்பட்ட சம்பளம், கொடுப்பனவுகள், போக்குவரத்து செலவுகள், ஒருங்கிணைந்த படிகள், உணவுப் படி, மிகை ஊதியம் மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் ஒவ்வொரு உத்தியோகத்தருக்கும் ஏற்ப வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி உத்தியோகத்தர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளினதும் அத்தாட்சிப்படுத்தப்பட்ட பிரதிகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) விசாரணை உத்தியோகத்தர்கள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்களா என்பதையும்;
(iv) நீக்கப்பட்டவர்களின் பெயர்கள், நீக்கப்பட்ட திகதி மற்றும் நீக்கப்படுவதற்கான காரணம் வெவ்வேறாக யாவையென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-06-21
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
கால்நடை வளர்ப்பு, கிராமிய சனசமூக அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-10-02
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ எச்.ஆர். மித்ரபால, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks