பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
253/2024
கௌரவ ரவீந்திர பண்டார,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஹப்புத்தளை மற்றும் ஹல்தமுல்லை பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவு என்பதையும்;
(ii) அக்காணி அளவு ஒவ்வோர் கிராம அலுவலர் பிரிவின் பிரகாரம் ஹெக்டயார் அளவில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி காணிகளில் இரண்டாம் தரப்பினருக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவு என்பதையும்;
(iv) அவ்வொவ்வோர் இரண்டாம் தரப்பினரதும் பெயர், அத்தரப்பினருக்கு காணிகள் வழங்கப்பட்டுள்ள இடம் மற்றும் வழங்கப்பட்டுள்ள அடிப்படை என்பவை வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில், காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமற்ற அரச காணிகள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அளவுகள் ஹெக்டயார்களில் வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(ii) மேற்படி பிரதேச செயலகப் பிரிவுகளில் இதுவரையில் இனங்காணப்பட்டுள்ள விவசாயக் காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவு என்பதையும்;
(iii) அக்காணிகளுள் இன்றளவில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள காணிகளின் அளவு ஹெக்டயார்களில் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-01-21
கேட்டவர்
கௌரவ ரவீந்திர பண்டார, பா.உ.
அமைச்சு
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks