பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
298/2024
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர,— வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் நுகர்வுக்காக வருடமொன்றுக்கு தேவைப்படும் உப்பின் அளவு யாதென்பதையும்;
(ii) மேற்படி அளவிலான உப்பை பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் யாவையென்பதையும்;
(iii) உப்பு உற்பத்திச் செய்யும் அரச நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) எப்பிரதேசங்களில் அதிகளவில் உப்பு உற்பத்திச் செய்யப்படுகின்றது என்பதையும்;
(v) உற்பத்தி செய்யப்படும் உப்பினை களஞ்சியப்படுத்துவதற்கான களஞ்சியசாலைகள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;
(vi) மேற்படி களஞ்சியசாலைகளின் கொள்திறன் மற்றும் அக்கொள்திறன் போதுமானதாக அமையும் கால அளவு என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) 2024.01.01 ஆம் திகதி தொடக்கம் தற்போதுவரை இலங்கைக்கு உப்பு இறக்குமதிச் செய்யப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், உப்பு இறக்குமதிச் செய்யப்பட்ட சந்தர்ப்பங்களின் எண்ணிக்கை மற்றும் மேற்படி ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் இறக்குமதிச் செய்யப்பட்ட உப்பின் அளவு என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) உப்பு இறக்குமதிச் செய்யப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-09-25
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks