பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
390/2025
கௌரவ சாமர சம்பத் தசனாயக,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட ஊழல் எதிர்ப்புக் குழு அலுவலகம் அப்போதைய பிரதம அமைச்சர் அலுவலகத்தின் கீழ் நிறுவப்பட்டதா என்பதையும்;
(ii) மேற்படி குழுவை நிறுவுவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் மற்றும் அமைச்சரவைத் தீர்மானத்தைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) அக்குழுவில் இடம்பெற்றிருந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அவர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(v) ஊழல் எதிர்ப்புக் குழு அலுவலகம் மூடப்பட்டபோது அவ் அலுவலகத்திற்குக் கிடைத்திருந்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அவ் ஊழல் எதிர்ப்புக் குழுவின் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றிய நபருடைய பெயர் மற்றும் முகவரி யாவை என்பதையும்;
(ii) அவர் அனுமதியின்றி வாகனத்தைச் செலுத்தி அதனை விபத்திற்குள்ளாக்கியதை அறிவாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2025-03-06
கேட்டவர்
கௌரவ சாமர சம்பத் தசனாயக, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்ச
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks