பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2713/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2012 மார்ச்சு மாதம் ஜெனிவாவிலுள்ள மனித உரிமைகள் சபைக்கு இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை கொண்டு வரமுன், அமெரிக்க இராஜாங்க வெளியுறவுச் செயலாளருடனான முதல் சந்திப்பு உத்தியோகபூர்வமாக எப்போது இடம்பெற்றது என்பதையும் ;
(ii) இச்சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்களையும்;
(iii) மேற்கூறிய சந்திப்பின் பின்னர், மேற்கூறியவாறான தீர்மானமொன்றை அமெரிக்கா கொண்டுவரலாமென்று எதிர்பார்கக்ப்பட்டதா என்பதையும்;
(iv) இலங்கையைப் பொறுத்தவரை புறக்கணிப்பு, அகந்தை, செயற்திறனின்மை என்பன, மேற்கூறிய தீர்மானத்தில் இலங்கைத்தரப்பு தோல்வியடைய காரணமாய் அமைந்தனவா என்பதையும்;
அவர் கூறுவாரா?
(ஆ) (i) ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட பிரகடனத்துடன் தொடர்புடைய, இற்றைவரை மேற்கொள்ளப்பட்ட தகுந்த நடவடிக்கைகளையும்;
(ii) அரசாங்கம் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு, 2012 மே 18 ஆம் திகதி அமெரிக்க இராஜாங்க வெளியுறவுச் செயலாளர் திருமதி ஹிலரி கிளின்டனைச் சந்திக்க ஏன் இணக்கம் தெரிவித்தது என்பதையும்;
(iii) அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்களையும் அச்சந்திப்பின் பிரதிபலனாக தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளையும்
அவர் கூறுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-05-09
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2014-03-19
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks