E   |   සි   |  

 திகதி: 2025-09-26   பதிலளிக்கப்பட்டவைகள் 

1008/ 2025 - கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1008/2025
      கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) சமூக ஊடகத் தளங்களில் பரப்பப்படும், குறிப்பாக இலங்கையில் இன முறுகல்களை அல்லது கும்பல் வன்முறைகளைத் தூண்டும் தவறான தகவல்கள் மற்றும் வெறுப்புப் பேச்சுக்களின் உள்ளடக்கங்கல்கள் பரப்புதலை கண்காணித்துக் கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      (ii) அத்தகைய ஆபத்தான உள்ளடக்கங்களைப் பரப்புவதைத் தடுப்பதற்காகச் சமூக ஊடக நிறுவனங்களுடனும் தொலைத்தொடர்புச் சேவை வழங்குநர்களுடனும் ஏனைய சம்பந்தப்பட்ட பங்கீடுபாட்டாளர்களுடனும் கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளனவா என்பதையும்;
      (iii) அவ்வாறெனில், அத்தகைய ஈடுபாடுகளின் தன்மை யாதென்பதையும்;
      (iv) அந்த ஈடுபாடுகளின் மூலம் அடைந்துள்ள முன்னேற்றங்கள் யாவையென்பதையும்;
      (v) இணைய வழி வெறுப்புப் பேச்சுக்கள், இன முறுகல்களுக்கான தூண்டுதல்கள் அல்லது கும்பல்களைத் திரட்டுதல் ஆகியன தொடர்பாக மேற்பார்வை செய்வதற்காக ஏதேனும் பிரத்தியேகமான கண்காணிப்பு அலகு அல்லது முகவர்களுக்கிடையிலான செயலணி தாபிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
      (vi) வெறுப்புப் பேச்சுத் தொடர்பான வகைப்பொறுப்புப் பொறிமுறைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks