E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1010/ 2025 - கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1010/2025
      கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2020 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை, கும்பல் வன்முறை அல்லது கும்பல் கொலைச் சம்பவங்கள் தொடர்பாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கைப் பொலிசில் பதிவுசெய்யப்பட்டுள்ள சம்பவங்களின் மொத்த எண்ணிக்கை யாதென்பதையும் தண்டனைச் சட்டக் கோவையின் கீழ் அல்லது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடுப்பு அல்லது பொதுமக்கள் பாதுகாப்பு தொடர்பான சட்டங்களின் கீழ் வழக்குத் தொடரப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை யாதென்பதையும், மாகாண ரீதியாக வெவ்வேறாகவும்;
      (ii) கும்பல் வன்முறை தொடர்பாக, இலங்கைப் பொலிசாருக்கும் உள்ளூர் நிர்வாகத்திற்கும் வழங்கப்பட்ட ஏதேனும் பணிப்புரைகள் உள்ளடங்கலாக அனைத்து மாகாணங்களிலும் சட்டங்களையும் சட்டச் செயன்முறைகளையும் சமச்சீராக அமுல்படுத்துவதை உறுதிப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாதென்பதையும்;
      (iii) கும்பல் வன்முறையால் பாதிக்கப்படக்கூடிய உயர் அபாயநேர்வுடைய ஏதாவது மாவட்டங்களை அல்லது பிரதேசங்களை அமைச்சு அடையாளம் கண்டுள்ளதா என்பதையும்;
      (iv) அவ்வாறாயின், அத்தகைய மாவட்டங்களில்/ பிரதேசங்களில் எதிர்காலக் கும்பல் வன்முறைச் சம்பவங்களைத் தடுப்பதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-11-08

கேட்டவர்

கௌரவ றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2025-11-08

பதில் அளித்தார்

கௌரவ ஆனந்த விஜேபால, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks