E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1100/ 2025 - கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1100/2025
      கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம்,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) அதிகஷ்டப் பிரதேச பாடசாலைகளில் நீண்ட காலமாக அதிபர்களாக பணியாற்றிய / பணியாற்றும் அதிபர்கள் අමප/12/1101/530/035 ஆம் இலக்க, 2012.08.08 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கமைய மிகை ஊழியர் அடிப்படையில் இலங்கை அதிபர் சேவையின் தரம் 2(ii) மற்றும் தரம் 3 இற்கான அதிபர்களாக நியமிக்கப்பட்டனர் என்பதையும்;
      (ii) අමප/21/1824/308/139 ஆம் இலக்க, 2021.11.23 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானம் மற்றும் பகிரங்கச் சேவை ஆணைக்குழுச் செயலாளரின் PSC/EST/02-05/01/2020 ஆம் இலக்க, 2022.06.02 ஆம் திகதிய கடிதத்திற்கு அமைவாக அவர்களது நியமனங்கள் நிரந்தரமாக்கப்பட்டன என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) (i) பாடசாலைகளின் தரப்படுதலுக்கு அமைவாக ஏனைய பாடசாலைகளின் அதிபர்களுக்கு செலுத்தப்படுகின்ற நிர்வாகக் கொடுப்பனவு மேற்படி (அ)இல் குறிப்பிடப்பட்ட அதிபர்களுக்கும் 2018 மார்ச் வரையில் செலுத்தப்பட்ட போதிலும், தற்பொழுது அது செலுத்தப்படுவதில்லை என்பதை அறிவாரா என்பதையும்;
      (ii) அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (iii) அதிபர் வெற்றிடங்களுக்கான நியமனங்களுக்கும் வேறு அதிபர்களுடனான ஒத்து மாறுவதற்கும் முன்வைக்கப்படுகின்ற கோரிக்கைகள் தற்பொழுது நிராகரிக்கப்படுகின்றதை அறிவாரா என்பதையும்;
      (iv) அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      (v) உள்ளக மற்றும் வலயங்களுக்கிடையிலான இடமாற்றங்கள் மற்றும் பதவியுயர்வுகள் மேற்படி (அ)இல் குறிப்பிடப்பட்ட அதிபர்களுக்கு வழங்கப்படுகின்றதா என்பதையும்;
      (vi) இன்றேல், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
      அவர் அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ (டாக்டர்) பத்மநாதன் சத்தியலிங்கம், பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks