E   |   සි   |  

 திகதி: 2025-09-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

1104/ 2025 - கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1104/2025
      கௌரவ சுரங்க ரத்நாயக்க,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2023, 2024 ஆண்டுகளிலும் மற்றும் 2025 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிலும் இலங்கையில் உற்பத்தி செய்யப்பட்ட சோளத்தின் அளவு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தின் அளவு என்பன ஒவ்வொரு ஆண்டு வாரியாக வெவ்வேறாக மெட்ரிக் டொன்களில் எவ்வளவென்பதையும்;
      (ii) இன்றளவில் இலங்கையில் சோள உற்பத்தியை மேம்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;
      (iii) இலங்கையில் சோள அறுவடை மேற்கொள்ளப்படும் காலங்களில் விவசாயிகளுக்கு நியாயமான விலையை பெற்றுக்கொடுப்பதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;
      (iv) சோளத்தின் விலை ஏற்றவிறக்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காக வகுக்கப்பட்டுள்ள வேலைத்திட்டம் யாது என்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-23

கேட்டவர்

கௌரவ சுரங்க ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks