E   |   සි   |  

 பதிலளிக்கப்படவுள்ளவைகள் 

1295/ 2025 - கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ. அவர்களினால் கேட்கப்பட்ட வினா

    1. 1295/2025
      கௌரவ ருவன்திலக்க ஜயகொடி,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
      (அ) (i) 2000 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க (கூட்டிணைத்தல்) சட்டத்தின் பிரகாரம், வறிய பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன்களை மேம்படுத்தும் நோக்கில் 'ரெஜீ ரணதுங்க கல்விசார் புலமைப் பரிசில் நிதியம்' ஆரம்பிக்கப்பட்டது என்பதையும்;
      (ii) கம்பஹா மாவட்டத்தில், மினுவங்கொட, பன்சில்கொட கிராம அலுவலர் பிரிவிலுள்ள 100 பேர்ச்சஸ் பரப்பளவு கொண்ட காணி, 2003.04.07 ஆம் திகதி அந்நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது என்பதையும்;
      (iii) 2005 ஆம் ஆண்டு, மேற்படி காணியில் கட்டடமொன்று நிர்மாணிக்கப்பட்டு, தொழிற்பயிற்சி நிலையமொன்று ஆரம்பிக்கப்பட்டதுடன், 2021 ஆம் ஆண்டு அந்நிலையம் மூடப்பட்டது என்பதையும்;
      (iv) 2023 ஆம் ஆண்டு, அக்கட்டடத்தை உடைத்தகற்றி, மேற்படி காணியைச் சுற்றி கம்பி வேலி அமைத்து, வாயிற்கதவை பொறுத்தியது மாத்திரமன்றி அக்காணியில் தென்னங் கன்றுகளையும் நாட்டி அதனை தனியார் உடைமை கொள்வதற்கான நடவடிக்கைகள் மோசடியான முறையில் மேற்கொள்ளப் பட்டுள்ளன என்பதையும்;
      அவர் அறிவாரா?
      (ஆ) மேற்படி காணியை பொது மக்களின் பொதுப் பயன்பாட்டுக்காக, பொருத்தமான அரச நிறுவனமொன்றிடம் கையளிப்பதற்கு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2025-09-26

கேட்டவர்

கௌரவ ருவன்திலக்க ஜயகொடி, பா.உ.

அமைச்சு

கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பத்தாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks