பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2821/ ’12
கெளரவ ரவி கருணாநாயக்க,— தனியார் போக்குவரத்து சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தனியார் போக்குவரத்து அமைச்சின் செயற்பாட்டினையும்;
(ii) இந்த அமைச்சில் கடமையாற்றும் பணியாள் தொகுதி உறுப்பினர்களின் எண்ணிக்கையினையும்
அவர் கூறுவாரா?
(ஆ) (i) இன்றுள்ளவாறாக நாட்டில் சேவையிலீடுபடுத்தப்படும் தனியார் பஸ்களின் மொத்த எண்ணிக்கையினையும்;
(ii) உரிய பதிவுடன் சேவையிலீடுபடுத்தப்படும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையினையும்;
(iii) உரிய பதிவின்றி சேவையிலீடுபடுத்தப்படும் தனியார் பஸ்களின் எண்ணிக்கையினையும்;
(iv) 2000, 2003 மற்றும் 2006 ஆம் ஆண்டுகளில் சேவையிலீடுபடுத்தப்பட்ட தனியார் பஸ்களின் எண்ணிக்கையினை வெவ்வேறாகவும்
அவர் கூறுவாரா?
(இ) (i) கடந்த 8 வருட காலத்தின் போது தனியார் பஸ் கட்டணங்கள் எப்போது திருத்தம் செய்யப்பட்டன என்பதையும்;
(ii) மேற்குறிப்பிட்ட காலப் பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட பஸ் கட்டண அதிகரிப்புகள் யாவை என்பதையும்
அவர் ஆண்டு வாரியாக இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-06
கேட்டவர்
கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.
அமைச்சு
தனியார் போக்குவரத்துச் சேவைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-03-06
பதில் அளித்தார்
கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks