E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2853/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

    1. 2853/ ’12

      கெளரவ அஜித் பி. பெரேரா,—  மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் கண்ணியக்குமாரி மாவட்டத்தில் கூடம்குழம் அணுமின் உற்பத்தி நிலையமொன்றுக்கான (Kudankulam Nuclear Power Plant) கருத்திட்டமொன்று நடைமுறையிலிருப்பதை அவர் அறிவாரா?

      (ஆ) அந்த அணுமின் உற்பத்தி நிலையத்தின்,

      (i) கொள்வனவு எவ்வளவு என்பதையும்;

        (ii) இலங்கையின் கடல் எல்லைக்கான தூரம் எவ்வளவு என்பதையும்;

      (iii) அமைவிடத்திலிருந்து இலங்கையின் நிலப்பரப்புக்கான தூரம் எவ்வளவு என்பதையும்;

      (iv) அமைவிட மதிப்பீட்டு அறிக்கை (Site Evaluation Study Report) இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ளதா என்பதையும்;

      (v) பாதுகாப்பு பகுப்பாய்வு அறிக்கை (Safety Analysis Report) இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ளதா என்பதையும்;

      (vi) மேற்கூறிய அறிக்கைகளை சபையில் சமா்ப்பிப்பாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (இ) (i) மேற்கூறிய மின் உற்பத்தி நிலையம் காரணமாக இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்படக் கூடிய தாக்கம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை மேற்கொண்டுள்ள கற்கைகள் யாவையென்பதையும்;

      (ii) அந்தக் கற்கைகளின் அறிக்கைகளை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

      (iii) மேற்கூறிய அணுமின் உற்பத்தி நிலையம் காரணமாக இலங்கையின் சுற்றாடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை தடுப்பதற்கு இலங்கை அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்

      அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-10-25

கேட்டவர்

கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.

அமைச்சு

மின்வலு, எரிசக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-10-25

பதில் அளித்தார்

கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks