E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2886/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

    1. 2886/ ’12

      கெளரவ ரவி கருணாநாயக்க,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      நாட்டிற்கு எதிராகத் தொடர்ந்து நடாத்தப்பட்ட சர்வதேச ஊடகங்களின் வெளிப்படையான எதிர்ப் பிரசாரங்களினால் அண்மைக் காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு தரம் சங்கடமான நிலைமைகள் ஏற்பட்டனவா என்பதையும்;

      (ii) 2010, 2011 மற்றும் 2012 (பெப்புருவரி - மார்ச்சு) ஆகிய வருடங்களில் அத்தகைய பிரசாரங்களை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ‘சனல் 4’ ஊடக நிறுவனம் மேற்கொண்டிருந்ததா என்பதையும்;

      (iii) 2010 ஆம் ஆண்டில் கெளரவ மஹிந்த சமரசிங்க அவர்கள் குறிப்பிட்டவாறு இவ்விடயம் தொடர்பாக ஐக்கிய இராச்சியத்தில் உள்ள ‘சனல் 4’ ஊடக நிறுவனத்திற்கு எதிராக ஏதாவது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;

      (iv) இலங்கை தொடர்பாக ‘சனல் 4’ ஊடக நிறுவனத்தின் குறித்த சில ஒளிபரப்பு பற்றி கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கப்பாடு பற்றிய சனாதிபதி ஆணைக்குழு (LLRC) கவனம் செலுத்தியுள்ளதா என்பதையும்

      அவர் கூறுவாரா?

      (ஆ) (i) ‘சனல் 4’ ஊடக நிறுவனத்தின் மேற்சொன்ன எதிர்ப் பிரசாரம் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட சீர் செய்தல் நடவடிக்கைகளையும்;

      (ii) இன்றேல் அவ்வாறு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமைக்கான காரணங்களையும்;

      (iii) உலகளாவிய ரீதியில் இலங்கைக்கு எதிரான ஊடகப் பிரசாரங்களைக் கூர்ந்து அவதானிக்கும் ஆளை அல்லது தாபனத்தையும்;

      (iv) இலங்கைக்கு எதிராக இத்தகைய வேறு ஏதாவது பிரசாரம் உள்ளதா என்பதையும்;

      (v) ‘சனல் 4’ ஒளிபரப்பின் பரிசீலனை தொடர்பாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கப்பாடு தொடர்பான சனாதிபதி ஆணைக்குழு மேற்கொண்டுள்ள சீர்திருத்த நடவடிக்கைகளையும்

      அவர் இச்சபைக்கு தெரிவிப்பாரா?

      (இ) இன்றேல் ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-07-12

கேட்டவர்

கௌரவ ரவி கருணாநாயக்க, பா.உ.

அமைச்சு

வெளிநாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks