E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2933/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 2933/ ’12

      கௌரவ புத்திக பதிரண,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     மாத்தறை மாவட்டத்தில் வெலிகம பிரதேச செயலாளர் பிரிவின் வல்லிவல மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அபிமானகம வீடமைப்புத் திட்டம் அமைந்துள்ளதென்பதையும்;

      (ii) 1985 ஆம் ஆண்டில் வெலிகம, அபிமானகம வீடமைப்புத் திட்டத்திற்கு அருகாமையிலுள்ள காணியொன்று  இலங்கையின் முதலாவது நகர வனப் பூங்காவாக பிரகடனப்படுத்தப்பட்டது என்பதயும்;

      (iii) வனப் பூங்காவை கொண்ட மேற்படி காணியை 2012 மே மாதம் 23 ஆம் திகதி தினமின பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட விளம்பரத்தின் ஊடாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) மேற்படி நகர வனப் பூங்காவை விற்பனை செய்வதற்கான காரணங்கள் யாவை என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-08-23

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-10

பதில் அளித்தார்

கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks