பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2934/ ’12
கௌரவ புத்திக பதிரண,— பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர பிரதேச செயலாளர் பிரிவுக்கு உரித்தான சியம்பலாகொட (மேற்கு) கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சிங்கல்தெனிய, நியகமலஹேன உள்ளிட்ட வளம்மிக்க பல வயற் காணிகளை அழித்து வயலுக்குத் தேவையில்லாத கால்வாயொன்றும், வீதியொன்றும் அமைக்கப்படுகின்றன என்பதையும்;
(ii) மேற்படி கால்வாய் மற்றும் வீதி நிர்மாணிக்கப்படுதல் தொடர்பாக பிரதேச மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றார்கள் என்பதையும்;
(iii) இந்த நடவடிக்கை காரணமாக மழை குறைவான காலங்களில் வயல்கள் அழிவடையும் அச்சுறுத்தல் இருப்பதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றார்கள் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேலே (அ) (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள கால்வாய் மற்றும் வீதியை நிர்மாணிப்பதற்காக செலவிடப்படுகின்ற தொகை எவ்வளவு என்பதையும்;
(ii) அதற்குத் தேவையான நிதி ஏற்பாடுகள் பெறப்படுகின்ற நிதியம் யாது என்பதையும்;
(iii) விவசாயிகள் நிராகரிக்கின்ற இக்கருத்திட்டத்தை நிறுத்திவிடுவதற்கும், முறையான விசாரணையொன்றை மேற்கொண்டு அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும் நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-09-04
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-09-04
பதில் அளித்தார்
கௌரவ கெளரவ விஜய தஹநாயக்க, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks