பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2953/ ’12
கௌரவ அஜித் பி. பெரேரா,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ‘மெனிங் டவுன்’ வீடமைப்புத் திட்டத்தில் சில குடியிருப்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட கூட்டாட்சி வரைபடத்திற்கு முரணாக அத்துமீறிய நிர்மாணிப்புக்களை மேற்கொண்டுள்ளனரென்பதையும்;
(ii) மேற்படி வீடமைப்புத் திட்டத்தின் முகாமைத்துவப் பிரிவு மேற்படி அத்துமீறிய நிர்மாணிப்புகளை அறிவிப்பதிலிருந்தும் அல்லது அப்புறப்படுத்துவதிலிருந்தும் திட்டமிட்டு தவிர்ந்து நடக்கின்றதென்பதையும்;
(iii) கூட்டாட்சி முகாமைத்துவ அதிகாரசபை தமது அதிகாரத்திற்கு ஏற்ப அத்துமீறிய நிர்மாணிப்புகளை அப்புறப்படுத்துவதற்காக விசாரணைகளை மேற்கொள்வதில்லை என்பதையும்
அவர் அறிவாரா?
(ஆ) (i) ‘மெனிங் டவுன்’ வீடமைப்புத் திட்டத்தில் தற்போது காணப்படும் அத்துமீறிய நிர்மாணிப்புகளை உடனடியாக நீக்குமாறு கூட்டாட்சி முகாமைத்துவ அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்குவதற்கும்;
(ii) மேற்படி அதிகாரசபையின் அன்றாட பரிசோதனையின் மூலம் மேற்படி கட்டிடத்தொகுதியின் கூட்டாட்சி ஆதனங்கள், பொது உபகரணங்கள், பொதுச் சொத்துக்களின் பராமரிப்பை சீராக பேணுவதை உறுதி செய்வதற்குத் தேவையான கட்டளைகளைப் பிறப்பிப்பதற்கும்;
(iii) இருப்பிடக்கூறுகள் சொத்தாண்மைச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு இயைபானதாகவும் உட்பட்டதாகவும் செயற்பட வேண்டுமென அனைத்து முகாமைத்துவ பிரிவுகளுக்கும் பொது அறிவுரைகளை வெளியிடுவதற்கும்
நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-16
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-16
பதில் அளித்தார்
கௌரவ விமல் வீரவங்ச, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks