E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2962/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

    1. 2962/ ’12

       கெளரவ அகில விராஜ் காரியவசம்,— பொருளாதார அபிவிருத்தி  அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)      சமுர்த்தி நிவாரணம் பெறுகின்ற 70 வயதுக்கு மேற்பட்ட  பிரஜைகளுக்கு ரூபா 1,000/- மாதாந்தக் கொடுப்பனவொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கான வேலைத்திட்டமொன்று தயாரிக்கப்பட்டிருப்பதால் இவர்களுக்கு உரித்தான சமுர்த்தி நிவாரணம் இரத்துச் செய்யப்படுவதற்கான ஆயத்தம் உள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) 70 வயதுக்கு மேற்பட்ட  பிரஜைகளுக்கு சமுர்த்தி நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தினால் மாதம்தோறும் செலவிடப்படுகின்ற மொத்தப் பணத் தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) மேலே குறிப்பிடப்பட்ட ரூபா 1,000/- கொடுப்பனவு வழங்கப்படுவதன் காரணமாக தற்போது வழங்கப்படுகின்ற சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டு்ள்ளதா என்பதையும்;

      (iii) ரூபா. 1,000/- கொடுப்பனவு வழங்கப்படுவதன் காரணமாக தற்போது வழங்கப்படுகின்ற சமுர்த்தி நிவாரணத்தை நிறுத்துவதற்குப் பதிலாக அக் கொடுப்பனவுடன் சேர்த்து  சமுர்த்தி நிவாரணத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்,

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2012-12-04

கேட்டவர்

கௌரவ அகில விராஜ் காரியவசம், பா.உ.

அமைச்சு

பொருளாதார அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2012-12-04

பதில் அளித்தார்

கௌரவ லக்ஷமன் யாப்பா அபேவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks