பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2987/ ’12
கௌரவ அஜித் பி. பெரேரா,— தொழில்நுட்பம், ஆராய்ச்சி, அணுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) தரம் உறுதி செய்யப்பட்டுள்ள ஒரு பொருளின் தரத்தை தொடர்ச்சியாக பேணிக்காப்பதற்கு இலங்கை தரக் கட்டளைகள் நிறுவகம் மேற்கொள்கின்ற நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) அது தொடர்பான சுற்றறிக்கைகள், ஒழுங்குவிதிகள் அல்லது கட்டளைகள் இருப்பின் அவை யாவை என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) சந்தையில் உள்ள S.L.S தரச்சான்றிதழைக் கொண்டுள்ள ஒரு வகை எஸ்பெஸ்ரஸ் கூரைத்தகட்டின் தரக்குறைவு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளுமாறு பண்டாரகம ஜகத் சந்திர பெரேரா மற்றும் புத்தி ஜயவிக்ரம பெரேரா ஆகியோர் 2011.09.23 ஆம் திகதி இலங்கை தரக் கட்டளைகள் நிறுவகத்தில் முறைப்பாடு செய்துள்ளதை அவர் அறிவாரா?
(இ) (i) மேற்படி முறைப்பாடு தொடர்பாக விசாரணை நடாத்தப்படாமைக்கான காரணம் யாது என்பதையும்;
(ii) மேற்படி கூரைத்தகடுகளுக்கு S.L.S தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள திகதி யாது என்பதையும்;
(iii) மேற்படி கூரைத்தகடுகளின் தரத்தை தொடர்ச்சியாக பேணிவருவதை உறுதி செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) (i) மேற்படி முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கூரைத்தகட்டை உற்பத்தி செய்கின்ற நிறுவனம் அதன் உற்பத்திகளின் S.L.S தரத்தை பேணிவருகின்றதா என்பது பற்றி பரிசோதனை செய்வதற்காக 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட விஞ்ஞான ரீதியான ஆராய்ச்சிகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட திகதிகள் யாவை என்பதையும்;
(iii) அவை தொடர்பான அறிக்கைகளை சமர்ப்பிப்பாரா என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(உ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-03-19
கேட்டவர்
கௌரவ அஜித் பி. பெரேரா, பா.உ.
அமைச்சு
தொழில்நுட்பம், ஆராய்ச்சி, அணுசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-03-19
பதில் அளித்தார்
கௌரவ பாட்டளி சம்பிக ரணவக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks