E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2990/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 2990/ ’12

      கௌரவ புத்திக பதிரண,— சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கேகாலை மாவட்டத்தின் கித்துள்கல களணிவெளி ஒதுக்கத்திற்கு சொந்தமான  வன பாதுகாப்புத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற மாகன்தூவ ஒதுக்கத்திற்கு குறுக்காக கித்துள்கலவில் இருந்து பள்ளேபாகே வரை வீதியொன்று நிர்மாணிக்கப்பட்டு வருகின்றதென்பதையும்;

      (ii) மேற்படி வீதி நிர்மாணிக்கப்படுவதால் கடுமையான சுற்றாடல் பாதிப்பு ஏற்படுவதாக சுற்றாடலியலாளர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார்கள் என்பதையும்;

      (iii) ஏற்படுகின்ற சுற்றாடல் சேதத்தை தடுப்பதற்காக மேற்படி வீதியின் நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு பிரதேச வாசிகள் கோரிக்கை விடுக்கின்றார்கள் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) (i) மாகன்தூவ ஒதுக்கத்திற்கு குறுக்காக மேலே குறிப்பிட்ட வீதியை நிர்மாணிக்க சட்டபூர்வமான அனுமதி பெறப்பட்டுள்ளதா;

      (ii) ஏற்படுகின்ற சுற்றாடல் சேதத்தையும் அதனோடு சம்பந்தப்பட்ட மக்கள் எதிர்ப்பையும் கருத்திற்கொண்டு மேற்படி வீதியின் நிர்மாணப் பணிகளை நிறுத்த நடவடிக்கை எடுப்பாரா

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-05

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

சுற்றாடல், புதுப்பிக்கத்தக்க சக்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2014-02-05

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks