E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2991/ 2013 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

    1. 2991/ ’12

      கெளரவ புத்திக பதிரண,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)     2010 மே மாதம் தொடக்கம் 2012 மே மாதம் வரை இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவி வகித்தவரின் கல்வி மற்றும் தொழிற் தகைமைகள் யாவை என்பதையும்;

      (ii) இவருக்கு இப்பதவிக்காக மாதாந்தம் வழங்கப்படும் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய சிறப்புரிமைகள் யாவை என்பதையும்;

      (iii) இவர் இரு வீட்டுப் பணியாளர்களை பணிக்கமர்த்தியுள்ளதாக போலியான தகவல்களை முன்வைத்து கூட்டுத்தாபன நிதியிலிருந்து மாதாந்தம் ரூபா 35,000 தொகையைப் பெற்றுக்கொண்டாரா என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) (i) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான ஓபல்கல தோட்டத்தில் 250 ஏக்கர் அளவிலான செழிப்பான ஏலம் பயிர்ச்செய்கைக் காணி எதுவித பகிரங்க அறிவித்தலும் இன்றி “சசிகி” எனும் தனியார் கம்பனிக்கு வழங்கப்படுள்ளது என்பதையும்;

      (ii) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான 32 - 606 மற்றும் 32 - 611 இலக்கங்கள் கொண்ட இரண்டு ஜீப் வண்டிகள் தலைவரினால் இரகசியமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதென ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர் என்பதையும்

      அவர் அறிவாரா?

      (இ) மேலே (ஆ) (ii) இல் குறிப்பிடப்பட்ட வாகனங்கள் விற்கப்பட்டிருப்பின் அவற்றைக் கொள்வனவு செய்தோரின் பெயர், முகவரிகள் மற்றும் விற்பனை விலை யாவையென அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2013-09-06

கேட்டவர்

கௌரவ புத்திக பத்திறண, பா.உ.

அமைச்சு

அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2013-10-22

பதில் அளித்தார்

கௌரவ கௌரவ தயாசிறித திசேரா, பா.உ.,, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks